எம்பள்ளி நிர்வாகம்:

புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி 1934ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் நிறுவப்பட்டது.

  • 1998ஆம் ஆண்டு அருட்பணி P. சிலுவை மிக்கேல் ராஜ் அவர்கள் நிர்வாகியாகப் பொறுப்பேற்று, 01.06.2002 அன்று பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றினர்
  • 2004 முதல் 2010 வரை அருட்பணி ஜேம்ஸ் பால்ராஜ் அவர்கள் நிர்வாகியாக இருந்து, பள்ளியின் வளர்ச்சியில் பங்களித்தார்.
  • 2010 முதல் 2013 வரை அருட்தந்தை A. வேதமாணிக்கம் அவர்கள் நிர்வாகியாக இருந்து, 7 வகுப்பறை கட்டிடங்களை நிர்மாணித்தார் மற்றும் கல்வி, ஒழுக்க வளர்ச்சியை உறுதிப்படுத்தினார்.
  • 2013 முதல் 2020 வரை அருட்பணி T. எட்வர்டு பிரான்சிஸ் அவர்கள் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டி, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள டெஸ்க் பெஞ்ச்கள் வழங்கி மாணவர்களின் கற்றலுக்கு உதவினார்.
  • அக்டோபர் 2020 முதல் அருட்பணி S.M. பால் பிரிட்டோ அவர்கள் தாளாளராக இருந்து, பள்ளியை நேரிய பாதையில் வழிநடத்தி, மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றார்.
Read more