Parish News

விவிலிய மாதத்தில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நற்செய்திகளை வாசிக்க முயற்சி செய்வோம். விவிலிய மாதத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இணைய வழிப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்போம். செப். 27 அன்று நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்போம். அன்பியப் பொறுப்பாளர்கள் அன்பியத்தில் உள்ள அனைவரையும் ஈடுபாட்டுடன் பங்கேற்க செய்வோம். அதிக எண்ணிக்கையில் பங்கேற்கும் அன்பியத்திற்கு ‘விவிலியச் சுடரொளி’ என்ற பட்டம் வழங்கப்படும்.

அக். 12 அன்று நமது பங்குத் திருஅவையில் நாம் கொண்டாட உள்ள நற்செய்தி அறிவிப்பு ஞாயிறை முன்னிட்டு, வருகின்ற ஞாயிறு (செப். 21) அன்று காலை திருப்பலி நிறைவடைந்தவுடன் அன்பியப்பொறுப்பாளர்கள், இயக்கங்கள், அமைப்புகள், திருத்தூது கழகங்கள் ஆகியவற்றின் தலைவர், செயலர் ஆகியோருக்கான முதற்கட்ட திட்டமிடல் கூட்டம் நடைபெறும். அனைவரும் தவறாது இக்கூட்டத்தில் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்.

அக். 02 அன்று மறைமாவட்ட திருப்பயணமாக ஓரியூர் அருளானந்தர் திருத்தலத்திற்குச் சென்று வர உள்ளோம். அதனை முன்னிட்டு 2 பயணத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1. அக். 01, 02 – பூண்டி, வேளாங்கண்ணி, ஓரியூர், இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வர – ரூ. 1,500. 2. அக். 02 –ஓரியூர், இராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்குச் சென்று வர – ரூ. 750. இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் உங்களது பெயர்களை நற்செய்திப் பணிக்குழுத் தலைவர், திருமிகு. ஆரோக்கியசாமி அவர்களிடம் பெயர்களைப் பதிவு செய்ய அன்புடன் அழைக்கின்றோம்.